Contact KOTTU MOZHI – ஸ்ரீ சாய் ஜோதிட நிலையம், Pollachi
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள எழில்கொஞ்சும் ஆனைமலையில் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்து, 12 வயதிலிருந்து என் தந்தையிடம் ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஜோதிடத்திலுள்ள பல முரண்பாடுகளினால் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இதை தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற தீவிரம் அதிகமானது. அதனால், பல ஆசிரியர்களிடம் பாரம்பரியம், எண்கணிதம், வாஸ்து. பஞ்சபக்ஷி, பிரசன்னம் உட்பட பல வகையான ஜோதிட முறைகளைக் கற்றுக் கொண்டபோது ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டேன். ஜோதிடம் முற்றிலும் உண்மையான கலை. நம் முன்னோர்களை எதையும் பொய்யாகக் கணிக்கவில்லை. ஆனால், ஜோதிடர்களில் உண்மையில்லாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களால்தான். மக்கள் ஜோதிடத்தைப் பார்க்கும் கோணமும் தவறாக இருக்கிறது. இதைப் பற்றி என்னை மேலும் ஆழமாக சிந்திக்க வைத்தவர் எழுத்தாளர். திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள். அவரின் எழுத்துக்கள் என்னை ஜோதிடத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைத்தது. அதற்கான தேடுதலில் இருந்தபோது திரு. ஹீலர் பாஸ்கர் ஐயாவின் அறிமுகம் கிடைத்தது. ஜோதிடத்தை மேம்படுத்தவும். அதன் உண்மைத்தன்மையை நாம் கற்றுக் கொண்டதோடு அல்லாமல், மக்கள் ஏமாறாமல் இருக்க அதை வெளிக்கொண்டுவர வேண்டும். அதற்கு பல வழிகளில் தேடுதல் அவசியம் என்பதை திரு.ஹீலர் பாஸ்கர் ஐயாவிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். அச்சமயத்தில்தான் பல ஆசிரியர்களிடம் ஜோதிட பாடம் கற்றுக் கொண்ட எனக்கு குருவாகக் கிடைத்தவர் திரு. தங்கபாண்டியன் ஐயா அவர்கள். ஜோதிடத்தின் பல கோணங்களை கற்றுக் கொடுத்து, ஆராய்ச்சி செய்ய உந்துகோலாக இருப்பவர். ஜோதிடம் பற்றிய பொய்யான விசயங்களைக் களைத்து உண்மைத்தன்மையை வெளிக்கொண்டுவர உறுதுணையாக உள்ள திரு. ஹீலர் பாஸ்கர் ஐயாவிற்கும், திரு. தங்கபாண்டியன் ஐயாவிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஜோதிடத்தை உளவியல் முறையில் அணுக ஆரம்பித்தேன். ஜோதிடத்தை உளவியலோடு இணைத்து மிக எளிமையான முறையில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கணக்குகளே இல்லாத உளவியல் ஜோதிட முறையை உருவாக்கியுள்ளேன். ஜோதிடத்தின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க, மக்களுக்கே அதை முழுமையாக கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். உலகம் முழுவதும் பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். ஜோதிட வகுப்புகளின் மூலம் ஆயிரத்துக்கும் மேலானவர்கள் ஜோதிடம் கற்றுக் கொண்டுள்ளனர். பலர் இதை தொழிலாகவும் செய்து, ஜோதிடத்தின் உண்மைத்தன்மையை மக்களுக்கு புரிய வைத்துக் கொண்டு உள்ளனர். ஜோதிடம், எண்கணிதம், பஞ்சபக்ஷி போன்ற பல வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஜோதிடர் இருந்தால் அவர்கள் வாழ்வானது. ஆக்கபூர்வமாக, நிம்மதி நிறைந்த வாழ்க்கையாக நிச்சயம் இருக்கும். ஜோதிடத்தை கற்றுக் கொள்ள ஆர்வமும், ஆத்மார்த்தமும் இருந்தால் போதும். அனைவராலும் ஜோதிடம் கற்றுக் கொள்ள முடியும். ஜோதிடத்தின் மூலம் நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவும், நம் வாழ்வை நிறைவாய். திருப்தியாய் வாழவும் முடியும்.

இப்படிக்கு  திருமதி. கோட்டு மொழி சத்யா (MA ASTRO, PhD)